
(சித்தா)
'சுற்றாடல் எம்மைக் காக்கும் - நாம் சுற்றாடலைக் காப்போம்' எனும் தொனிப்பொருளை நோக்காகக் கொண்டு அரசாங்க மற்றும் தனியார் பாடசாலைகளில் தரம் 6 தொடக்கம் உயர் வகுப்புக்களை உள்ளடக்கத்த தக்கதாக சுற்றாடல் முன்னோடி நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்த வகையில் கமு/கமு/கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் சுற்றாடலைப் பாதுகாக்க உறுதுணையாக அமைந்த மாணவர்களுக்கான பச்சைப் பதக்கம் அணிவிக்கும் நிகழ்வு இன்று (10.09.2020) பாடசாலை அதிபர் அருட்சகோதரர் செபமாலை சந்தியாகு அவர்களின் தலைமையில் பாடசாலை ஒன்று கூடலின் போது நடைபெற்றது.
இந் நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர்காளான திரு.ஆர்.கருனாகரன், திரு.ரி.பூவேந்திரன் மற்றும் திருமதி எஸ்.ரவீந்திரன், உப அதிபர் திரு.கே.சசிகரபவன் ஆகியோருடன் சுற்றாடல் முன்னோடிக் கழக பொறுப்பாசிரியர்களான திருமதி.இ.வரதராஜன், திரு.இ.சங்கீத், திரு.எஸ்.அனித், திருமதி.எஸ்.ரஸித்தா, திருமதி.எஸ்.சுகிர்தா ஆகியோர்களுடன் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர். இந் நிகழ்வில் சுற்றாடல் முன்னோடிக் கழக மாணவர்கள் 50 பேருக்கு சின்னம் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.



















