கிழக்கு மாகாண விளையாட்டு வர்ண விருது வழங்கும் விழாவில் ராம் கராத்தே டோ சங்கத்திற்கு விருது


(வி.சுகிர்தகுமார்)
கிழக்கு மாகாண விளையாட்டு வர்ண விருது வழங்கும் விழாவில் பயிற்றுவிப்பாளருக்கான விருது ராம் கராத்தே டோ சங்கத்தின் ஸ்தாபகர் சிஹான் க.கேந்திரமூர்த்திக்கு வழங்கப்பட்டதுடன் தேசிய கராத்தே சுற்றுப்போட்டியின் குழுக்காட்டா போட்டியில்(தேசிய விளையாட்டு விழா) வெற்றியீட்டி கிழக்கு மாகாணத்திற்கு இரண்டாவது தடவை பெருமை சேர்த்த மாணவர்களும்; விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

கிழக்கு மாகாண கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி.முத்துபண்டா தலைமையில் அம்பாரை ஹாடி தொழிநுட்ப கல்லலூரியின் கேட்போர் கூட மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் இவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

கௌரவிப்பு விழாவில் கிழக்கு மாகாண அளுநர் அனுராத ஜகம்பத் மற்றும் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க உள்ளிட்டவர்கள் அதிதியாக கலந்து கொண்டு விருதுகளை வழங்கி வைத்தனர்.

இதன்போது 2019ஆம் ஆண்டு தேசிய கராத்தே சுற்றுப்போட்டிகளில் சாதனை படைத்த கராத்தே ராம் கராத்தே சங்கத்தின் வீரர்களுக்கு கேடயம் மற்றும் பணப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் பயிற்றுவிப்பாளர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

பொலநறுவையில் நடைபெற்ற 45ஆவது தேசிய விளையாட்டு போட்டியில் கராத்தே குழு காட்டாவில் வெண்கலப்பதக்கம் பெற்ற பி.சரோன்சச்சின், எஸ்.ரிசோபன், எஸ்.சராஜ்முகமட் ஆகியோரும் இங்கு கௌரவிக்கப்பட்டனர்.

இவர்களுக்கான பயிற்சியை சிஹான் க.கேந்திரமூர்த்தி கென்சி கே.ராஜேந்திரபிரசாத், மற்றும் கென்சி கே.சராங்கன், வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் வெற்றி தொடர்பில் கருத்து தெரிவித்த ராம் கராத்தே சங்கத்தின் ஸ்தாபகர் சிஹான் க.கேந்திரமூர்த்தி வெற்றிக்கு உதவிய விளையாட்டு உத்தியோகத்தர் அ.ரிஷாந்தன், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர், கிழக்கு மாகாண விளையாட்டுப்பணிப்பாளர் மற்றும் ஏனைய

ராம் கராத்தே டோ கழக பயிற்றுவிப்பாளர்கள், மாணவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொண்டார்.