New Diamond கப்பலுக்குள் விசேட நிபுணர் குழுவொன்று சென்றுள்ளது!


விசேட நிபுணர் உள்ளிட்ட மூவர் கொண்ட குழு MT New Diamond கப்பலுக்குள் சென்றுள்ளது.

குறித்த கடற்பரப்பு கொந்தளிப்பாக காணப்படுவதாகவும் பலத்த காற்றுடன் கூடிய வானிலை காணப்படுவதாகவும் கடற்படைப் பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த கப்பல் மேலும் ஆழமான கடற்பிராந்தியத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில், MT New Diamond கப்பல் 41 கடல் மைல் தொலைவில் தற்போது காணப்படுகின்றது.