( இரா.சயனொளிபவன் )
திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பட்டை சின்ன முகத்துவாரம் பகுதியில் விடுதலைப் புலிகள் மறைத்து வைத்ததாகக் கூறப்படும் ஆயுதங்களை தேடும் பணிகள் நேற்று முன்னெடுக்கப்பட்டன.
அக்கரைப்பற்று -பொத்துவில் பிரதான வீதியில் சின்ன முகத்துவாரம் பகுதியில் அமைந்துள்ள ஆலையடி பிள்ளையார் ஆலயத்தின் பின்னால் புதையல் தேடும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எஸ். ஜயவீர தலைமையிலான பொலிஸாரும், சாகாமம் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரும் இணைந்து இந்த தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். தம்பட்டை கிராம சேவகர் எஸ்.சஞ்சயன் பிரசன்னமாகியிருந்தார் .
தேடும் பணிகளின்போது எவையும் மீட்கப்படாத நிலையில் தோண்டும் பணிகள் இடைநிறுத்தப்பட்டது
கடந்த யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளினால் தங்கம் உட்பட பல பொருட்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக கிழக்கின் பல்வேறு பிரதேசங்களில் தேடுதல் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது .
செய்திகளை உடனுக்குடன் WhatsApp இல் தெரிந்துகொள்ள
0771660248 இந்த இலக்கத்தை உங்கள் தொலைபேசியில் Battinews என Save பண்ணுங்கள் உங்கள் WhatsApp இருந்து JOIN என மேலே குறிப்பிட்ட எமது இலக்கத்துக்கு ஒரு மெசேஜ் அனுப்புங்கள்
















