மாணவியை அழைத்துச் சென்று தனிமையில் வைத்திருந்த இளைஞன் கைது


(மண்டூர் ஷமி)
வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாமரக்கேணி, காக்காச்சிவட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய பாடசாலை மாணவி இளைஞர் ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நேற்று (15) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

நீண்ட நாட்களாக குறித்த மாணவியுடன் அதே பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் தொடர்பினை வைத்திருந்ததாகவும் பின்னர் குறித்த இளைஞன் மாணவியை அழைத்துச் சென்று வேறுஇடத்தில் தனிமையில் வைத்திருந்ததாகவும் சம்பவத்தை அறிந்த மாணவியின் பெற்றோர் வெல்லாவெளி பிரதேச செயலகத்தில் உள்ள சிறுவர் நன்னடத்தைப் பரிவில் முறைப்பாடு செய்ததையடுத்து வெல்லாவெளி பொலிஸாருக்கு சம்பவம் பற்றி தெரியப்படுத்தப்பட்டது.

பின்னர் சம்பவத்தில் தொடர்புடைய இளைஞனை கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட மாணவி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள இளைஞனை இன்று(16) நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் WhatsApp இல்  தெரிந்துகொள்ள 
  0771660248 இந்த இலக்கத்தை உங்கள் தொலைபேசியில் Battinews என Save பண்ணுங்கள் 
 உங்கள் WhatsApp இருந்து JOIN என மேலே குறிப்பிட்ட எமது இலக்கத்துக்கு ஒரு மெசேஜ் அனுப்புங்கள்