கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கி வைப்பு


(எஸ்.நவா)
மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச பிரிவுக்குட்பட்ட பெரியபோரதீவு பட்டாபுரம் பிரதேசத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவருடன் சந்தித்து பேசியவா்கள் நெருங்கி பழகியவர்களை இனங்கண்டுஅவா்களை பொது சுகாதார பரிசோதகர்கள் , இராணுவத்தினர்கள் அவா்களின் கண்காணிப்பில் பாதுகாப்பான முறையில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

பட்டாபுரத்தில் ஆறு குடும்பங்களும் முனைத்தீவைச் சேர்ந்த ஐந்து குடும்பங்களுக்கும் மொத்தமாக 48பேருக்கு {30} பெரியபோரதீவைச் சேர்ந்தவரும் களுவாஞ்சிகுடி லாவண்யா நகைக்கடை உரிமையாளருமான திரு.பாக்கியராசா அவர்களின் நிதி அணுசரணையுடன் ஒரு குடும்பத்துக்கு தலாரூபா 3000 பெறுமதியான நிவரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இதன் போது போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி , உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.புவனேந்திரன் , பிரதேச பொதுச சுகாதார பரிசோதகர் திரு .குபேரன் , கிராம சேவக உத்தியோகத்தர்களான வி.உதயகுமார் ,எஸ். சக்திவேல் ஆகியோர்கள் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.