கொரோனாவிலிருந்து மக்களை பாதுகாக்க ஓட்டமாவடியில் விழிப்புணர்வு திட்டம்


(எச்.எம்.எம்.பர்ஸான்)
நாட்டில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

அந்தவகையில், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் மக்களை கொரோனாவிலிருந்து பாதுகாக்க பல்வேறு விழிப்புணர்வு திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில், வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் வாகன மூலம் பொதுமக்களுக்கு வீதி அறிவித்தல்களை வழங்கி வருகின்றனர். அதில், தேவையற்ற பிரயாணங்களை தவிர்த்தல், வெளிச்செல்லும் போது அவசியம் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளிகளைப் பேணி நடத்தல். அத்தோடு கடந்த மாதம் 28ம் திகதிக்குப் பின்னர் ஹம்பகா மாவட்டத்தில் இருந்து யாரும் வருகை தந்திருந்தால் வைத்திய அதிகாரி அலுவலகத்துக்கு தெரியப்படுத்தல், கைகளை அடிக்கடி சவர்க்காரமிட்டு கழுவிக் கொள்ளுதல், காய்ச்சல், தடிமல் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்ந்து கொண்டு அரச வைத்தியசாலைகளில் தங்களுடைய சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளல் போன்ற அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன.