
(எம்.ஜி.ஏ நாஸர்)
சப்பிரிகமக் தேசிய வேலைத்திட்டதின் கீழ் மட்டக்களப்பு- சித்தாண்டி சோதிடர் வீதி இருபது இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் கொங்கிறீட் பாதையாக புனரமைக்கும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் எம்.ஜி.ஏ நாஸர் அறிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளர் பூ. பிரசாந்தன் இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
பிரதேச சபை உறுப்பினர் நவரத்தினம் திருநாவுக்கரசு தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.
இவ்வீதி கடந்த பல வருடகாலமாக புனரமைக்கப்படாதிருந்ததனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கிவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் சிபாரிசின் பேரில் இவ்வீதி புனரமைக்கப்படுகிறது.












