மண்முனை மேற்கு பிரதேசத்தில் தகரக் குடிசையில் வாழ்ந்து வந்த இரு குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கையளிக்கப்பட்டது


(எஸ்.சதீஸ்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேசத்தில் தகரக் குடிசையில் மிகவும் கஷ்ட நிலையில் வாழ்ந்துவந்த இரு குடும்பங்களுக்கு புதிதாக அமைக்கப்பட்ட வீடுகளை கையளிக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (08ம் திகதி) இடம்பெற்றது.

நெடியமடு 6ம் கட்டை எனும் கிராமத்தில் கல்வி கற்கும் இரு பெண் பிள்ளைகளுடன் வாழ்ந்துவந்த விசேட தேவையுடைய குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு சுவிஸ் ராயூ குடும்பத்தினருடன், சுவிஸ் பேண் முருகன் தொண்டர்களும் இணைந்து இவர்களுக்கான வீட்டினை அமைத்துக் கொடுத்துள்ளனர்

இதே போன்று உன்னிச்சை கிராமத்தில் மூன்று பெண் பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த விசேட தேவையுடைய பெண் ஒருவருக்கு பரமேஸ் கவி எனும் அன்பர் ஊடாக, எம் கடமை உறவுகள் முகநூல் நண்பர்கள் இணைந்து இவ் வீட்டினை அமைத்துக் கொடுத்துள்ளனர்.

பரமேஸ் கவி என குறிப்பிடப்படும் சுப்பிரமணியம் பரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், ஆசிரியர்களான விக்னகுருபரன், புஸ்பநாதன், தெய்வீகன், வேதராஜா, கிராம உத்தியோகத்தர் நேசதுரை மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இப் பிரதேசத்தில் இவ்வாறான சமூக ஆர்வலர்களால் மேற்கொள்ளப்படும் உதவிகள் என்றும் பாராட்டத்தக்கது என இன் நிகழ்வில் கலந்துகொண்ட
செயலாளர் எஸ். சுதாகர் தெரிவித்தார்.