மட்டக்களப்பு பதுளை வீதியை அண்டியுள்ள உறுகாமம் புதூர் குளத்தில் நேற்று (புதன்கிழமை) இரவு விழுந்து மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.உறுகாமம் புதூர் கிராமத்தில் வசிக்கும் அப்துல் காதர் அப்துல் ஸலாம் (வயது 58) எனும் 7 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது வழமைபோன்று இவர் உறுகாமம் புதூர் குளத்தில் இரவு நேர மீன்பிடிக்காக புதன்கிழமை இரவு 9 மணியளவில் வீட்டிலிருந்து குளத்திற்குச் சென்றுள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் இவர் குளத்தில் விழுந்து உயிரிழந்து கிடப்பது பற்றி சக மீனவர்கள் கண்டு சடலத்தை மீட்டெடுத்துள்ளனர்.
இது பற்றி கரடியனாறு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதும் பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.












