வரவு செலவுத் திட்டம் 2021 - முழு விபரம் - LIVE


* நாடாளுமன்றம் நாளை (18) காலை 9.30 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

*ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் சமூர்த்தி கடைகள் நிறுவ ரூ .1000 மில்லியன் மேலதிக ஒதுக்கீடு

*ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஓய்வூதிய வயது 60 ஆக நீட்டிக்கப்படும்.

*அரசு ஊழியர்களுக்கும் வெளிநாட்டு கல்வி அல்லது வேலைக்கு இரண்டு ஆண்டுகள் வரை விடுமுறை

*மஞ்சள், இஞ்சியை இறக்குமதி செய்வது முற்றிலும் தடை

* கொழும்பு, களுத்துறை, கண்டி, அனுராதபுரம், மட்டக்களப்பு ஆகிய இடங்களில் புதிய தொழில்நுட்பக் கல்லூரிகள்
*தேநீர் விருந்துக்காக சபை ஒத்திவைப்பு

*தொழில்நுட்ப கல்லூரிகளில் மாணவர்கள் இணைப்பு தற்போது 100,000 ஆக உள்ளது, இது வருடத்துக்கு 200,000 மாணவர்களாக அதிகரிக்கப்படும்.

*50க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் அதன் தொழிலாளர்களுக்கு காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும். முதலாளியின் பங்களிப்பு 0.25 சதவீதமாக இருக்கும்

*உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு புதிய முதலீட்டு வலயம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

* ஆசிய அபிவிருத்தி வங்கி (ஏடீபீ) , ஜெய்கா மற்றும் உலக வங்கியிடமிருந்து 1400 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் பெற அரசாங்கம்  எதிர்பார்க்கிறது
* கல்வி தொலைக்காட்சி சேவைக்கு மேலதிகமாக 3,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

* தொழில்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க நடவடிக்கை
*கர்ப்பிணி மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம். அவர்களது போஷாக்கினை மேம்படுத்த நடவடிக்கை. திரிபோஷ உற்படுத்திய அதிகரிக்க  1500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

*பொலிஸ் சேவையை வலுப்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. பல்வேறு பொது பாதுகாப்பு திட்டங்களுக்கு கூடுதலாக ரூ .2500 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* கிராமங்களுக்கும் தொழிநுட்பத்தை கொண்டு செல்ல நடவடிக்கை. முழு நாடும் உள்ளடங்கும் வகையில் “கிராமத்துக்கு தொழிநுட்பம்” வேலைத்திட்டம்.

*தொழில்நுட்ப துறையை மேம்படுத்துவதற்கு 8,000 மில்லியன் மேலதிகமாக ஒதுக்கீடு

*மக்கள் பாதுகாப்பை மேம்பாட்டுத்துவதற்காக, மேலதிகமாக 750 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

* தேசிய வரி வருவாயில் 50% க்கும் அதிக பங்களிப்பு செய்யும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு தனியான பொது வரியை அறிமுகப்படுத்த நடவடிக்கை

* மாதத்துக்கு 2இலட்சம் 50ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டுவோரின், வருடாந்த மொத்த தொகைக்கு வரி அறவிடுதல் தொடர்பில் ஆராயப்படும்

*வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த நிதி ஒதுக்க வேண்டியதன் காரணமாக அரசாங்க திட்டங்கள் முடங்கியுள்ளன.


*“அரசாங்க சேவை ஊக்குவிக்கப்பட வேண்டும், செலவைக் குறைக்க மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கின்றோம். அரசாங்க ஊழியர்களை அரசியல் ரீதியாக பழிவாங்கியமைக்காக முன்னாள் அரசாங்கத்தை கண்டிக்கின்றோம்” - பிரதமர்

*வங்கி மற்றும் நிதி அமைப்பு சீர்திருத்தப்பட வேண்டும். வங்கிகள் புதிய நோக்குடன் செயல்பட வேண்டும். வெளிநாட்டு வருமானத்தை அதிகரிப்பது அவசியம்.

*கொவிட் -19 ஆல் பாதிக்கப்பட்டுள்ள சிறு வர்த்தகர்கள், தேசிய உற்பத்திக்கு பங்களிக்க ஊக்குவிக்கப்பட வேண்டும், இதன் மூலம் தற்போதைய இறக்குமதி அடிப்படையிலான பொருளாதாரத்தை மாற்ற முடியும்
நூற்றுக்கு 06 சதவீதம் பொருளாதார வளர்ச்சி வேகத்தை முன்னெடுத்து செல்ல எதிர்பார்ப்பு

*கொவிட் -19 உள்ளிட்ட நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கு இலவச மற்றும் மேம்பட்ட சுகாதார சேவையை உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் நோக்கங்கள் தொடர்பில் பிரதமர் தனது உரையில் குறிப்பிடுகின்றார்.