ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் நிலைபேறான திட்டங்களை அமுல்படுத்துவதற்கு கிழக்கு மாகாண சபை தயாராகிறது

 

(சிஹாரா லத்தீப்)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்திற்கமைய நிலைபேறான அபிவிருத்தி திட்டங்களை கிழக்கு மாகாணத்தில் அமுல்படுத்துவதற்கு கிழக்கு மாகாண சபை நடவடிக்கை எடுத்திருக்கின்றது.
இதற்கமைய கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யகம்பத்தின் தலைமையில் மாகாண மட்டத்தில் இம்மாகாணத்திலடங்கும் அம்பாறை, மட்டக்களப்பு ,திருகோணமலை மாவட்டங்களில் சுபீட்சத்தின் நோக்கு ஜனாதிபதியின் கொள்கை திட்டத்துக்கமைய அபிவிருத்தித் திட்டங்களை வகு
க்கும் விசேட விசேட மாநாடு இன்று(16) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மாகாண ஆளுநர் திருமதி.அனுராதா யகம்பத் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் துஷிதபீ.வணிகசேகர, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே கருணாகரன், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எஸ் பண்டார உட்பட மாகாண அமைச்சின் செயலாளர்கள் மாகாண திணைக் களங்களின் பணிப்பாளர்கள் ,மாவட்ட பணிப்பாளர்கள் உட்பட அரச திணைக்களங்களில் உயரதிகாரிகள் பலரும் பிரசன்னமாகியிருந்தனர் .



இந்த நிகழ்வினை ஆரம்பித்து வைத்து கிழக்கு மாகாண ஆளுனர் கருத்துரை வழங்குகையில் 

ஜனாதிபதியின் தூர நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத் திட்டம் இந்நாட்டில் வறுமையை ஒழிக்கவும் பின்தங்கிய பகுதிகளை அபிவிருத்தி செய்யவும் நாட்டுக்கு முன்னேற்றகரமான திட்டங் களை உருவாக்கவும் வழிவகுக்கின்றது. இந்த உயரிய நோக்கம் கொண்ட இந்த சுபிட்சத்ததின் நோக்கு கொள்கை திட்டத்தின் நிலைபேறான அபிவிருத்தி திட்டங்களை அமுல் நடத்துவதற்கு இந்த மாகாணங்களைச் சேர்ந்த அரச அதிகாரிகள் இதனை முன்னுரிமை அடிப்படை யில் நடத்துவதற்கும் முன்வரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

ஆளுநர் அனுராதாயகம்பத் தொடரந்தும் இங்கு கருத்து வழங்கு கையில்;- பல்வேறு பயனுள்ள வழங்களை கொண்டுள்ள மாகாணம் தான் கிழக்கு மாகாணம் இந்த மாகாணத்தின் வளங்கள் இன் நாட்டின் அபிவிருத்திக்கு இது வரை காலமும் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை இதனை கருத்தில் கொண்டு சுபீட்சத்தின் நோக்கு ஜனாதிபதியின் கொள்கை திட்டத் திற்கு அமைய நிலைபேறான அபிவிருத்தி திட்டங்களில் கிழக்கு மாகாணத்தின் அனைத் துவளங்களும் பயன்படுத்துவதற்கு வழிவகை செய்யப்படவேண் டும் என கேட்டுக்கொண்டார்.