அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் 2021 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு


(இரா.சயனொளிபவன்)  
 அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் 2021 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று  இடம்பெற்றது.
அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.ஹம்சா அவர்களினால் தேசியக்கொடி ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதனையடுத்து  நாட்டுக்காக உயிர் நீத்த படை வீரர்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அனைவரும் சத்தியப்பிரமாண உறுதியுரையை மேற்கொண்டனர். 
நீதிபதியினால்  சிற்றுரை தொடர்ந்து சுகாதார வைத்திய அதிகாரியினால் நீதிமன்றங்களில் எவ்வாறு சுகாதார முறைகளை பின்பற்றி நீதிமன்றங்களை நடத்த வேண்டும் என விவரிக்கப்பட்ட்து 
நீதிமன்ற பதிவாளர் , ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் அகிலன் , சட்டத்தரணிகள் சங்க தலைவர் வஹிஜ் , பிராந்திய தலைவர் ரஷீத் , சட்டத்தரணிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.