ஏறாவூர்பற்று பிரதேசத்திற்குட்பட்ட மாவலையாறு கிராமத்தில் ஆரோக்கியா இயற்கை முறை விவசாய குழுவின் அறுவடை நிகழ்வும், 2021 ம் ஆண்டுக்கான ஆரம்ப நடுகையும் இன்று நடைபெற்றது. இந் நிகழ்வில் விவசாய திணைக்கள விவசாய போதனாசிரியர், பிரதேச பொதுசுகாதார பரிசோதகர், மாவலையாறு பாடசாலை அதிபர், ஆசிரியர் மற்றும் வேள்ட் விஷன் நிறுவன இயற்கை முறை விவசாய திட்ட முகாமையாளர், உத்தியோகத்தர்கள் ஆகியோரின் பங்கு பற்றுதலுடன் கிராம மக்களின் ஏற்பாட்டில் இந் நிகழ்வு இடம் பெற்றது.
இந் நிகழ்வில் கிராம மக்கள் கொரியா நாட்டு வேள்ட் விஷன் மற்றும் கொய்க்கா(KOICA) நிறுவன நிதி உதவியுடன் வேள்ட் விஷன் லங்கா நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற இவ் திட்டம் தொடர்பான தங்களது அனுபவங்களினை பகிர்ந்து கொண்டதுடன் கிராமத்தில் வேள்ட் விஷன் நிறுவனம் மற்றும் விவசாய திணைக்களம் மற்றும் அரச திணைகளங்கள் இணைந்து சிறப்பான முறையில் திட்டத்தினை நடைமுறைபடுத்தி வருவதாகவும் இதனால் கிராமத்தில் பல மாற்றங்கள் எற்பட்டுள்ளதாகவும் மேலும் இத் திட்டத்தினை அண்மைய கிராமங்களுக்கும் வழங்குமாறும் நஞ்சற்ற முறையில் மரக்கறி பயிர்களை உற்பத்தி செய்து உண்பதற்கும் அதன் ஊடாக வருமானத்தினை அதிகரித்து கொள்வதற்கும் உதவி புரிகின்ற வேள்ட் விஷன் நிறுவனத்தினர் மற்றும் விவசாய திணைக்களம் போன்றோருக்கு தங்களது நன்றியினையும் தெரிவித்தனர்




















