
(ந.குகதர்சன்)
வேள்ட்விஷன் வாகரை பிராந்திய அபிவிருத்தி திட்டத்தினூடாக வாகரை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதாரத்தினை ஊக்குவிக்கும் பொருட்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.
வேள்ட்விஷன் வாகரை பிராந்திய அபிவிருத்தி திட்டத்தின் அபிவிருத்தி இலகுபடுத்துனர் ஜெ.றொபேட் அகிலானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வேள்ட்விஷன் வாகரை வாழைச்சேனை பிராந்திய முகாமையாளர் கொன்சேகா அனுராஐ;, வேள்ட்விஷன் வாகரை பிராந்திய அபிவிருத்தி இலகுபடுத்துனர் ஆ.தனுராஜ், வேள்ட்விஷன் வாகரை பிராந்திய சிறுவர் தாயாரிப்பு திட்ட இணைப்பாளர் அன்ரனி ரதீஸ், கிராம சேவை உத்தியோகத்தர்களான த.சுதாகரன், எம்.உவைஸ், அபிவருத்தி உத்தியோகத்தர் க.பிறின்ஸ், கிராம அபிவிருத்தி சங்க நிர்வாக உறுப்பினர்கள், கள தரிசிப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வாகரை பிரதேச செயலக பிரிவில் பனிச்சன்கேணி, கட்டுமுறிவு, வாகரை வடக்கு கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட 13 பயனாளிகளுக்கு நீர் பம்பி, வட்டை, முள்ளுக்கம்பி, மீன்பிடி வலை, தையல் இயந்திரம் போன்ற உள்ளீடுகள் வழங்கி வைக்கப்பட்டது.




















