(எம்.எஸ்.எம்.நஜாத்)
கொவிட்-19 தொற்றுநோய் என்பது ஒரு உலகளாவிய அச்சுறுத்தலாகும்,
இது உலகம் முழுவதும் பரவி வருகிறது என்பதையும் இலங்கை
அதில் விதிவிலக்கல்ல என்பதையும் நாம் அனைவரும் அறிவோம்.
கொவிட்-19 தொற்றானது முதன்முதலில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் 2019 டிசம்பரில் பதிவாகியுள்ளது, தற்போது வரை இது உலகின் பல நாடுகளுக்கு அது பரவியுள்ளதுடன் இலங்கையில் முதல் கொவிட்-19 நோயாளி 2020 ஜனவரி 27 ஆம் திகதி கண்டறியப்பட்டார்.
இவ்வாறு கொரோனாவின் முதலாவது மற்றும் இரண்டாவது அலையை எதிர்கொண்ட இலங்கை, தற்பொழுது மூன்றாவது அலையை எதிர்கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
சீனாவின் வூஹானில் இருந்து கொவிட்-19 தொற்று வைரஸ் பதிவானதையடுத்து , நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக நாட்டு மக்களையும் பொருளாதாரத்தையும் காப்பாற்றும் முகமாக, 2020 ஜனவரி 23 அன்று ஜனாதிபதி பணிக்குழுவை நியமித்தார்.
கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட சீன சுற்றுலாப் பயணி 2020 ஜனவரி 27 அன்று இலங்கையில் கண்டறியப்பட்டார். இந்த நாட்டில் ஒரு கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே, தொலைநோக்கு பார்வையுடன் அதிமேதகு ஜனாதிபதி கொவிட்-19 வைரஸ் குறித்த கலந்துரையாடலை தொடங்கினார்.
மேலும், ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் திறனையும் சிறந்த நிர்வாகத்தையும் நன்கு அறிந்த ஜனாதிபதி, இந்த கொடிய வைரஸ் பரவுவதைக்கட்டுப்படுத்தும் முகமாக, அவரை கொவிட்-19 பரவலை தடுக்கும்
தேசிய செயல்பாட்டு மையத்தின் (NOCPCO) தலைவராக நியமித்தார்.
கொவிட் -19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் மற்றும் இராணுவத்
தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவின் அறிவுறுத்தலின் கீழ்,
சீனாவின் வூஹானில் சிக்கித் தவித்த இலங்கை மாணவர்களுக்களை
இலங்கைக்கு அழைத்து வந்து தனிமைப்படுத்துவதற்காக இலங்கை
இராணுவம் அதன் தொழில்நுட்பக் குழுக்களைப் பயன்படுத்தி உடனடியாக அனைத்து வசதிகளுடன் கூடிய முதல் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தை தியதலாவையில் 72 மணி நேரத்திற்குள் நிர்மாணித்து கொடுக்கப்பட்ட பணியை வெற்றிகரமாக முடித்தது.
இராணுவத்தினரால் மேற்கொண்ட இந்த பெரிய அர்ப்பணிப்புக்காக, சிக்கித் தவித்த மாணவர்கள், அவர்களின் பெற்றோர் மற்றும் இந்த நாட்டின் குடிமக்களால் அவர்கள் நன்கு பாராட்டப்பட்டனர்.
இரண்டாவதாக, வெளிநாடுகளில் இருந்து வருபவர்களைத் தனிமைப்படுத்துவதற்காக தனிமைப்படுத்தப்பட்ட மையமாக பூனானியில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்திற்காக கட்டப்பட்ட கட்டிடங்களை படையினர் தயார்படுத்தினர்.
முதலாவது கொத்தணி தொடக்கம் தற்பொழுது வரை வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை விமான நிலையத்திலிருந்து தனிமைப்படுத்தல்
நிலையங்கள் வரை இராணுவம் பாதுகாப்பாக அழைத்துச் சென்று அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களை விட்டு வெளியேறும் வரை
நிவர்த்தி செய்கின்றது.
மேலும் அவர்களுக்கான மருத்துவ, உணவு மற்றும் போக்குவரத்து வசதிகளை கூட இராணுவமே ஏற்பாடு செய்கின்றது. இராணுவத்தினரின் இந்த உண்ணதமான செயற்பாட்டிற்கு தனிமைப்படுத்தல் மையங்களில்
தனிமைப்படுத்தப்பட்டவர்கள் கடந்த காலங்களில் பாராட்டினையும் தெரிவித்தனர்.
படையினரின் ஒத்துழைப்புடன் கொரோனா தொற்றுக்களின் எண்ணிக்கையின் அதிகரிப்பிற்கேற்ப ஒவ்வொரு பகுதியிலும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களும் அதிகரிக்கப்பட்டன.
தற்போதைய கொவிட்-19 வைரஸின் மூன்றாவது அலையின் திடீர் அதிகரிப்பு மற்றும் அதன் தாக்கத்தினை கருத்தில் கொண்ட இராணுவம் ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள இளைஞர் நிலையங்கள் ,அரச கட்டிடங்கள் மற்றும் ஏனைய கட்டிடங்களை இடைநிலை பராமரிப்பு மையங்களாக மாற்றும் பணிகளில் முன்முரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
இதனால் நோயாளிகள் குணமடையும் வீதம் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இது தவிர, இலங்கை இராணுவம் கொரோனா வைரஸால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு கணிசமான எண்ணிக்கையிலான படுக்கைகளை வைத்தியசாலைகளுக்கு வழங்கியது.
தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்ட இராணுவம், அனைத்து முக்கிய சுகாதார வசதிகளையும் கொண்ட சீதுவையில் முதன் முதலில்
மிகப்பெரிய இராணுவ-மேம்பட்ட கொவிட்-19 வைத்தியசாலையின் கட்டுமான பணியின் இறுதிக்கட்டத்தில் உள்ளது.
பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு சிறந்த அவசரகால சுகாதார சேவையை
இலவசமாக வழங்குவதற்கான நோக்கத்துடன் மேம்படுத்தப்பட்ட இந்த
புதிய கொவிட்-19 வைத்தியசாலையில் இராணுவத்தினரால் தயாரிக்கப்பட்ட 1200 படுக்கை கட்டில்கள் பொருத்தப்பட்டுள்ளன,
இதற்கான அனுசரனையானது பிராண்டிக்ஸ் குழும நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி திரு அஷ்ரப் ஒமர் அவர்களினால் வழங்கப்பட்டுள்ளது.மேலும் நாடு முலுவதும் 10,000 படுக்கைகளாக உயர்த்துவதே படையினரின் இலக்காகும்.
முதல் கொரோனா கொத்தணியில், ஏனைய அபிவிருத்தியடைந்த நாடுகள் இந்த கொடிய வைரஸை சமாளிக்க நிறைய சிரமங்களை எதிர்கொண்ட அதேவேளை நோயாளிகளைக் கட்டுப்படுத்துதல், பரவலை தடுப்பது மற்றும் முகாமைத்துவ முறைகள்,தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள், சுய-தனிமைப்படுத்தல், முடக்கல், தனிமைப்படுத்தப்பட்ட முறைமைகள் மற்றும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தல், போன்ற தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி கொவிட் -19 தொற்றாளர்கள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையை குறைப்பதில் இலங்கை இராணுவம் வெற்றி பெற்றது,
இதற்காக இராணுவத்தினர் சுகாதாரத் துறைகள், சகோதர சேவைகள் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொண்டது.
நாட்டில் கொவிட் -19 தொற்றுநோயின் முதல் கொத்தணியின் நிலைமையை படையினர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த போதிலும், எதிர்பாராத விதமாக இலங்கையின் இரண்டாவது கொவிட் -19 அலை, 2020 ஒக்டோபர் மாதம் ஆரம்பத்தில் நாடு முழுவதும் பரவ ஆரம்பித்ததுடன் அது நூற்றுக்கணக்கான உயிர்களையும் காவிக்கொண்டது.
ஒக்டோபர் 4 ஆம் திகதி கொரோனாவின் இரண்டாவது அலையின் ஆரம்பத்தில் , வெறும் 13 இறப்புகளுடன் 3,396 தொற்றாளர்கள் மட்டுமே இருந்தன. ஆனால் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் காரணமாக நாளுக்கு நாள் இறப்பு மற்றும் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தன. எவ்வாறாயினும், படையினரின் அர்ப்பணிப்பு மற்றும் அயரா பணியால் , பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையின் வீதம் சமீபத்தில் குறைவடைந்தன.
2021 ஏப்ரல் 1 ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 10 ஆம் திகதி வரையான கொவிட்-19
பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தினால் வெளியிடப்பட்ட (NOCPCO) அறிக்கையின்படி, நாடு முழுவதும் நாளொன்றுக்கு 150 - 228 கொரோனா தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளனர்.
சித்திரை புத்தாண்டு காலப் பகுதியில் பெருமளவிலான மக்கள் ஆடை, அத்தியாவசிய பொருட்கள் என பல்வேறு பொருள் கொள்வனவிற்காக
சுகாதார வழிமுறையை மீறி செயற்பட்டிருந்த காரணத்தினால்
இலங்கையில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை கடுமையாக
அதிகரித்து திடீரென மூன்றாம் கொரோனா அலை தொடங்கியது.
குறிப்பாக நாளொன்றில் 300 தொற்றாளர்கள் கூட அடையாளம் காணப்படாதிருந்த இலங்கையில், தற்போது புத்தாண்டுக்குப் பிறகு 2000
திற்கும் அதிகமான தொற்றாளர்கள் நாளொன்றில் அடையாளம்
காணப்படும் அளவிற்கு கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை
சடுதியாக அதிகரித்துள்ளது.
2021 மே 10 ஆம் திகதி தொடக்கம் மே 17 ஆம் திகதி வரையான கொவிட்-19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தினால் வெளியிடப்பட்ட (NOCPCO) அறிக்கையின்படி, நாடு முழுவதும் நாளொன்றுக்கு 2000-2500
வரையிலான கொரோனா தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளனர்.
"நிலைமை மோசமான நிலைக்கு தள்ளப்பட்டால், நாங்கள் எங்கள்
முகாம்களில் உள்ள அனைத்து படுக்கைகளையும் கொடுத்துவிட்டு
மரங்களுக்கு அடியில் தங்கியருந்து அவர்களுக்கான பாதுகாப்பையும்
வழங்குவோம், மேலும் ஒரு கொவிட் -19 நோயாளி கூட தரையில் படுத்துக் கொள்ள இடமளிக்கமாட்டோம் '' என்று ஜெனரல் ஷவேந்திர
சிவா கூறியதாவது நாட்டில் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த இலங்கை இராணுவம் மேற்கொள்ளும் தியாகம் மற்றும் இராணுவத் தளபதியின் சிறந்த தலைமைத்துவ குணங்கள் போன்றவை வெளிப்படையாக எடுத்துக்காட்டுகிறது.
தற்போதைய நாட்டின் நிலைமையைக் கருத்தில் கொள்ளும்போது,கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை நாட்டில்
நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இருப்பினும், கொவிட் -19 தொற்றின் முதல் மற்றும் இரண்டாவது அலைகளை சிறப்பாக கையாண்ட இலங்கை இராணுவம், இதனை ஒரு பெரிய சவாலாக எடுத்துக் கொண்டு, கொவிட்-19 தொற்றுநோய்களின் மூன்றாவது அலையைச் சமாளிக்கும் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்..














