
கிழக்கு மாகாண காலநிலைக்கு சீரமைவான விவசாய நீர்ப்பாசன திட்டத்தினால் (உலக வங்கியின் நிதி அனுசரணையுடன் விவசாய அமைச்சினால் நடைமுறைப் படுத்தப்படும்) விவாசாய மாதிரி கிராம திட்டத்தின் கீழ் நுண் நீர்பாசன தொகுதிகள் மற்றும் மாமரக் கன்றுகள் என்பன திருகோணமலை மொறவெவ, கோமரங்கடவல பிரதேசங்களில் பிரதேசத் தலைவர் திரு. டபிள்யு. பி. ஜெகத் குமார (மொறவெவ) மற்றும் பிரதேசத் தலைவர் திரு. சந்தன விஜித குமார (கோமரங்கடவல) அவர்களால் விவசாயிகளிற்கு வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வானது கிழக்கு மாகாண காலநிலைக்கு சீரமைவான விவசாய நீர்ப்பாசன திட்ட பிரதி பணிப்பாளர் மற்றும் விவசாய திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந் நிகழ்வில் விவசாய போதனாசிரியர்கள் மற்றும் திட்டதின் கிழக்கு மாகாண உத்தியோகத்தர்கள் பங்குபற்றினர்.















