குழந்தைகள் தவறுதலாக மணிக்கூட்டு பற்றரி (button battery) விழுங்கினால் என்ன செய்ய வேண்டும்


இந்த சிறிய மணிக்கூட்டு பற்றரிகள் மணிக்கூடு மற்றும் சிறிய விளையாட்டுப் பொருட்களில் காணப்படுகிறது. இவற்றை குழந்தைகள் தவறுதலாக விழுங்கக்கூடும். விழுங்கினால் தொண்டை மற்றும் களம் பகுதிகளில் சிக்க கூடும். அல்லது இரைப்பையை அடையும். இந்த பற்றரியில் இருக்கும் இரசாயனங்கள், பற்றரி சிக்கு பட்டிருக்கும் இடத்தை இரண்டு மணித்தியாலங்களுக்குள் அரித்து காயத்தை ஏற்படுத்த கூடியது.

எனவே இவற்றை விழுங்கினால் செய்ய கூடாதவை:

1. குழந்தையை சத்தி (வாந்தி) எடுக்க வைக்க கூடாது.

2. தண்ணீர் போன்றவற்றை விழுங்க கொடுத்து பற்றரியை மேலும் உள்ளே தள்ள கூடாது.

எனவே இவ்வாறான சந்தர்ப்பத்தில் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதன் மூலம் உரிய முறையில் பற்றரியை அகற்ற முடியும். அல்லாது விடின் விழுங்கப்பட்ட பற்றரியானது ஏனைய சிறு பொருட்கள் போல் அல்லாது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.

எனவே வீட்டில் பற்றரியை காணாது பிள்ளை விழுங்கி விட்டதாக சந்தேகித்தால் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டும்

Dr.விஜி திருக்குமார்
விசேட குழந்தை நல வைத்திய நிபுணர்