மட்டக்களப்பு - கொழும்பு 'புலதுசி' அதிவேக குளிரூட்டப்பட்ட புகையிரத சேவை ஆரம்பம்

 


(அஸ்ஹர் இப்றாஹிம்)

பொலநறுவை -கொழும்பு கோட்டைக்கு இடையில் நடைபெற்ற நகரங்களுக்கிடையிலான "புலதுசி " அதிவேக குளிரூட்டப்பட்ட புகையிரத சேவை 28-01-2022 திகதி முதல் மட்டக்களப்பு - கொழும்பு  சேவையாக விஸ்தரிக்கப்படும். என இன்றைய  தினம் 2022.01.25ம் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

இப்புகையிரத சேவையானது மட்டக்களப்பிலிருந்து அதிகாலை 01.30 மணிக்கு புறப்பட்டு காலை 08.45 மணிக்கு கொழும்பு கோட்டையை சென்றடையும்.மீண்டும் பிற்பகல் 15.05 கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படும் புகையிரதமானது இரவு 21.52க்கு மட்டக்களப்பு புகையிரத நிலையத்தை வந்தடையும் என அறிவிக்கப்பட்டதனை தொடர்ந்து கிழக்கு மாகாணத்திலுள்ள மக்கள் பெரும் சந்தோசத்தினை அடைந்துள்ளனர்.

இதற்கிடையில் பொத்துவில் , அக்கரைப்பற்று , அம்பாறை கல்முனை ஆகிய இடங்களிலிருந்து மட்டக்களப்பு புகையிரத்திற்கு செல்வதற்கும் மட்டக்களப்பிலிருந்து மேற்குறிப்பிட்ட இடங்களுக்கு புகையிரதத்தில் பயணிப்போரின் நன்மை கருதி இணைப்பு பஸ் சேவையினை நடாத்த இலங்கை போக்க்குவரத்து சபை சலை பொறுப்பு முகாமையாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொது மக்கள் கேட்டுள்ளனர்