
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் “பசுமை விவசாய” திட்டத்திற்கமைய கந்தகாடு இராணுவ பண்ணையில் சேதன பசளையை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கை திங்கட்கிழமை (24) அறுவடை செய்யப்பட்டது.
3 வது (தொ) இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடை படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் டீஎல்சீஎன் முத்தந்திரிக அவர்களின் வழிகாட்டலுக்கமைய கந்தகாடு இராணுவ முகாமின் சிப்பாய்களினால் 180 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பில் விளைவிக்கப்பட்ட நெல் அறுவடைச் செய்யப்பட்டது.