ஓட்டமாவடியில் மாணவனை காணவில்லை; whatsApp ஒன்லைன் காட்டுகிறது


 வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி -1 பழைய மக்கள் வங்கி வீதியில் வசித்து வந்த 17 வயதுடைய மாணவன் ஒருவன் காணாமல் போயுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

குறித்த மாணவன் தனது வீட்டிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை (28) மாலை 3 மணியளவில் துவிச்சக்கரவண்டியில் சென்றுள்ளார்.  இதுவரை வீடு திரும்பாத நிலையில் மாணவனை பெற்றோர்கள் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், மாணவன் சென்ற துவிச்சக்கரவண்டியும் அவர் அணிந்திருந்த மேற்சட்டையும் சனிக்கிழமை (29) கல்குடா - கல்மலை கடலோரத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மாணவன் கடலில் மூழ்கி மரணமடைந்திருக்கலாம் எனும் சந்தேகத்தில் கல்குடா பொலிஸாரின் உதவியுடன் சுழியோடிகள் தேடிய போதும் மாணவன் கிடைக்கவில்லை.

மாணவன் பயன்படுத்தி வந்த whatsapp ஒன்லைன் காட்டுவதாகவும், message அனுப்பினால் அவருடனான தொடர்பை தடுக்கும் வகையில் இலக்கங்கள் block செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு மர்மமான முறையில் காணாமல் போயுள்ள மாணவன் குறித்த எந்தத் தகவல்களும்  இன்றைய தினம் (31)  வரையில் கிடைக்காத நிலையில், மாணவனைக் கண்டுபிடிக்க வாழைச்சேனைப் பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.