கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தில் இடம்பெற்ற 74 ஆவது சுதந்திர நிகழ்வு




















(சித்தா)

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் 74 ஆவது சுதந்திரதின நிகழ்வு கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி.ந.புள்ளநாயகம் அவர்களின் தலைமையில் கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வானது அரச நிருவாக அமைச்சின் சுற்றரிக்கைக்கு அமைவாக சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடைபெற்றது. மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி.ந.புள்ளநாயகம் அவர்களால் தேசியக் கொடியேற்றப்பட்டதுடன் தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. இந் நிகழ்வில் மாகாணக் கல்விப் பணிப்பாளரின் சுதந்திர தின உரையும் இடம்பற்றது. நிகழ்வில் மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், உட்பட திணைக்கள உயரதிகாரிகள், உத்தியோகஸ்த்தர்கள் எனப் பலர்பங்குபற்றினர்.