ஓட்டமாவடி பிரதேசத்தில் 74 ஆவது சுதந்திர தினம் நிகழ்வு

 

(ரூத் ருத்ரா, எஸ்.எம்.எம்.முர்ஷித்)

இலங்கை ஜனநாயக குடியரசின் 74 ஆவது சுதந்திர தினம் நிகழ்வு இன்று ஓட்டமாவடி பிரதேசத்திலுள்ள மீராவோடை மன்பஉல் ஹிதா அரபுக் கல்லூரி, ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில்  மற்றும் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை ஆகியவற்றில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில்; மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.நௌபர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், குடும்ப நல உத்தியோகத்தர்கள், வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

அரபுக்கல்லூரி நிர்வாகத்தினால் எற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வானது லெவ்பை தம்பி அப்துல் ஹலீம் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் சுதந்திர தினத்தினை முன்னிட்டு தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் மரக்கன்றுகளும் நடப்பட்டன.
 
இந் நிகழ்வில் ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஆத்மீக தலைவர் ஹிசாஜ்ஜதுல் இஸ்லாம் வல் முஸ்லிமீன் ஹாதம்பூரி பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
கல்குடா ஸ்ரீலாலலங்கார பாடசாலையில் அதிபர் தேவாலங்கார தேரர்,வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார ,மற்றும் அரபுக்கல்லூரியின் செயலாளர் சினிமுகமட் அபுல்ஹசன் ஆகியோர்கள் விசேட அதிதிகளாக கலந்து கொண்டனர்.
 
மூவின மக்களின் அர்ப்பணிப்பினால்இந்த நாட்டிற்கு சதந்திரம் கிடைக்கப்பெற்றது.கிடைக்கப்பெற்ற சுதந்திரத்தை எல்லோரும் பாதுகாக்க வேண்டும்.சில்லறை காசுக்காக அடிமைப்பட்டு குழப்பத்தை ஏற்படுத்தும் வகாப் வாத அடிப்படை வாத குழுக்களுக்கு இடமளியாது செயற்பட வேண்டும் என இதன்போது உரையாற்றிய கல்குடா ஸ்ரீலாலலங்கார பாடசாலையில் அதிபர் தேவாலங்கார தேரர் தெரிவித்தார்.

பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம்.நௌபர் தலைமையில் சுதந்திர தின நிகழ்வுகள் யாவும் நடைபெற்றது. இந் நிகழ்வில் சுதந்திர தினத்தினை முன்னிட்டு தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் மதத் தலைவர்களது ஆசியுரையும் இடம்பெற்றது. இந் நிகழ்வில் சபை உறுப்பினர்கள்,மற்றும் உத்தியோகஸ்த்தர்களும் கலந்து கொண்டனர்


ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் வீ.தவாராஜாவின் தலைமையில் நாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் இடம்பெற்றது.


ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் நாட்டின் 74வது சுதந்திர தின நிகழ்வு அலுவலகத்தில் இடம்பெற்றது.