கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளராக மூ.கோபாலரத்தினம் கிழக்கு மாகாண ஆளுனரால் நியனம்.

(சித்தா)

மட்டக்களப்பு செட்டிபாளையத்தினை பிறப்பிடமாக கொண்ட இவர் மூத்ததம்பி செல்லம்மா தம்பதியினரின் புதல்வரான இவர்

1995 ஆம் ஆண்டு இக்கிராமத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மூன்றாவது இலங்கை நிருவாக சேவை அதிகாரி என்பதுடன், தனது ஆரம்பக் கல்வி தொடக்கம் உயர்தரம் வரை மட்/ பட்/செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றார். கலைமாணி பட்டத்தினை பேராதனை பல்கலைக் கழகத்திலும் பொதுநிருவாக துறையில் முதுமானிப் பட்டத்தினை இந்திய பல்கலைக் கழகத்திலும் பெற்றார்.

இவர் தம்பலகாமம்/ ஏறாவூர் நகர்/ பட்டிப்பளை/ கல்முனை மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேச செயலகங்களில் உதவி பிரதேச செயலாளராகவும் குச்சவெளி, நாவிதன்வெளி,திருக்கோயில் மற்றும் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகங்களில் பிரதேச செயலாளராகவும், திறைசேரி முகாமைத்துவ திணைக்களத்தின் மேலதிகப் பணிப்பாளர் நாயகமாகவும் தற்போது கிழக்கு மாகாண சபையின் பேரவைச் செயலாளராகவும் கடமை புரிகின்றார். என்பதுடன் இவர் இலங்கை நிருவாக சேவை விசேட தர அதிகாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.