தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்ட பகுதியொன்றில் நேற்றிரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் ஒருவர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட் நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் வடகொடை, வடமத்திய கும்புரவத்தை பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக லிந்துலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
பண முரண்பாடு காரணமாக இரு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறினால் இக் கொலைச் சம்பவம் நடத்துள்ளதாக பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரரணைகளில் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் பிரதேசத்தை விட்டுத்தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளார்.
சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.