(ஏறாவூர் நிருபர் நாஸர்)
கிழக்குப்பல்கலைக்கழகத்தின் 25 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா 12.03.2022 சனிக்கிழமை வேந்தர் வைத்திய கலாநிதி வேல்முருகு விவேகானந்த ராஜா தலைமையில் மட்டக்களப்பு - வந்தாறுமூலை வளாகத்தின் நல்லையா கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
முதலாம் நாள் விழாவில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தவிசாளர் சிரேஷ்ட பேராசிரியர் சந்தன பி உடவத்த கலந்துகொண்டார்.
உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இம்முறை கிழக்குப்பல்ககை;கழகத்தின் வரலாற்றில் முதல்தடவையாக 1958 உள்வாரி மற்றும் வெளிவாரி மாணவர்களுக்கும் பட்டப்பின்தகைமை பெறுபவர்களுக்கும் கௌரவப்பட்டம் பெறுபவர்களுக்கும் பட்டம் வழங்கப்பட்டது. வணிக நிருவாகத்தில் முதுமானி , முதுக்கலைமானி, முதுக்கல்விமானி,அபிவிருத்திப்பொருளியலில்; முதுமானி ஆகிய துறைகளில் 133 பேருக்கு பட்டப்பின் தகைமைகளுக்கான தகைமைகளும் இரண்டு பேருக்கு கௌரவப்பட்டங்களும் முதலாம் அமர்வில் வழங்கப்பட்டன.
ஏனைய இளமானிப்பட்டங்களுக்காக இரண்டாவது அமர்வில் 408 மாணவர்களும் 3 ஆவது அமர்வில் 340 மாணவர்களும் 330 பட்டம் பெற்றனர். மேலும் அடுத்த அமர்வில் 360 மாணவர்களும் மற்றைய அமர்வில் 385 மாணவர்களும் பட்டமளித்து கௌரவிக்கப்பட்டதாக பதிவாளர் அமரசிங்கம் பகிரதன் தெரிவித்தார்.