தென்கிழக்குப் பல்கலைக்கழக வெள்ளி விழா நினைவு மலர் வெளியீடு!


நூருல் ஹுதா உமர்


இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டு இருபத்தியைந்து வருடங்கள் நிறைவுற்றதனை முன்னிட்டு தொகுக்கப்பட்ட நினைவு மலர் உபவேந்தரிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வு பல்கலைக்கழக உபவேந்தர் அலுவலகத்தில் உபவேந்தர் பேராசிரியர் அபூவக்கர் றமீஸ் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் நினைவு மலரின் பிரதம ஆசிரியரும் நூலகருமான எம்.எம். ரிபாஉத்தீன், கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில், இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீடத்தின் பீடாதிபதி எஸ்.எம்.எம். மஸாஹிர், பதிவாளர் எச். அப்துல் சத்தார் உள்ளடங்கலான நினைவு மலர் பதிப்புக் குழுவினர் கலந்துகொண்டனர்.

வெள்ளி விழா நினைவு மலரின் மின்னியல் பதிப்பு 23.10.2021 ஆம் திகதி பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற வெள்ளி விழா நிகழ்வில் வெளியிட்டு வைக்கப்பட்போதிலும் நினைவு மலரின் அச்சுப் பதிப்பே உபவேந்தரிடம் கையளிக்கப்பட்டது.

நிகழ்வில் நினைவு மலரின் முதற் பிரதியினை மலரின் பிரதம ஆசிரியர் எம்.எம். ரிபாஉத்தீன் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசியர் அபூவக்கர் றமீஸ் அவர்களுக்கு வழங்கிவைத்தார். உபவேந்தர் அவர்கள் தமது கரத்தினால் பீடாதிபதிகள், பல்கலைக்கழக பதிவாளர் உள்ளடங்கலான மலர் குழுவினருக்கான மலரின் பிரதிகளை வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கது.