ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் பணிக்காக இராணுவக் குழுவினர் மாலிக்கு புறப்பட்டனர்

மாலியில் உள்ள (MINUSMA) ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் பணிக்காக நன்கு பயிற்றுவிக்கப்பட்ட 243 பேர் உள்ளடக்கிய இராணுவ குழுவின் 100 பேரை
உள்ளடக்கிய முதற்கட்ட குழுவினர் நேற்று (23) மாலை மாலி நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றனர்.

மேற்படி குழுவினரை வழியனுப்பி வைக்கும் முகமாக, பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்திற்கு சென்று அக்குழுவினருடன் சில எண்ணங்களை பகிர்ந்து கொண்டு அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.