
வெள்ளவத்தையில் ரயில் விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்துச் சம்பவம் வெள்ளவத்தைப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை (28) மாலை இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் பாதுகாப்பு நிலையத்திற்கு அருகில் நேற்று மாலை இரு யுவதிகள் மீது ரயில் மோதியுள்ளது. கொழும்பு - கோட்டை ரயில் நிலையத்தில் அளுத்கம நோக்கி பயணித்த ரயிலிலேயே இரு யுவதிகளும் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளனர்.
இதன்போது இரு யுவதிகளும் காயமடைந்த நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவ்வாறு அனுமதிக்கப்பட்ட இரு யுவதிகளில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இரு யுவதிகளும் உடன்பிறந்த சகோதரர்கள் எனவும் உடப்புஸ்ஸல்லாவ பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.












