பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட உரையொன்றை நிகழ்த்திக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் எதிராக, எதிர்கட்சி எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியது.
இன்றைய பாராளுமன்ற அமர்வுகளுக்கு வருகைத் தந்த கோட்டாபய ராஜபக்ஸவிற்கு, எதிர்கட்சி இவ்வாறு எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றது.
பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமளிதுமளியை அடுத்து, சபை நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஒத்தி வைத்தார்.













