நெல்லிற்கான புதிய விலை நிர்ணயம்: ஒரு கிலோ நாட்டரிசி நெல் 120 ரூபாவிற்கு கொள்வனவு!


இன்று முதல் ஒரு கிலோ நாட்டரிசி நெல் 120 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை சம்பா நெல் 125 ரூபா , கீரி சம்பா 130 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்படும் என நெல் சந்தைப்படுத்தல் சபை அறிவித்துள்ளது.

சந்தையில் ஒரு கிலோகிராம் நெல்லின் விலை 90 ரூபாவிற்கும் குறைவாக குறைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

முதல் கட்டமாக, அமைச்சானது ரூ. 2 பில்லியன் பெறுமதியான 30,000 மெட்ரிக் தொன் நெல்லை கொள்முதல்.செய்யவுள்ளது.

இந்த வருடம் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் 500,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நெல் சந்தைப்படுத்தல் சபைநேற்று முதல் விற்பனை செய்யப்படும் ஒரு கிலோகிராம் அரிசியின் விலையை 5 ரூபாவினால் குறைக்க நடவடிக்கை எடுத்திருந்தது.