கல்குடா கல்வி வலயத்தில் தரம் 5 மாணவர்களுக்கான 'சுற்றாடல் சார்ந்த செயற்பாடு' நூல் வெளியீடு

 (சித்தா)

கிழக்கு மாகாணத்தில் கல்குடா கல்வி வலயமானது பல வழிகளிலும் பாதிக்கப்பட்ட மாணவர்களையும், இன்று வரையும் அதிகளவான ஆசிரியர் பற்றாக்குறையையும் கொண்ட காணப்படுகின்றமையை கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.தினகரன்- ரவி அவர்கள் சுட்டிக் காட்டியிருந்தார். இந்த வகையில் இன்று 06.08.2022 கல்குடா கல்வி வலயத்தில் தரம் 5 மாணவர்களுக்கான 'சுற்றாடல் சார்ந்த செயற்பாடு' எனும் நூல் வெளியீடு இடம் பெற்றிருந்தது.

கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.தினகரன்- ரவி அவர்களின் தலைமையில் கல்குடா கல்வி வலயத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் கல்குடா கல்வி வலயத்தின் கல்வி அபிவிருத்திக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி. எம்.ஏ.றிஸ்மியா பானு, கல்குடா கல்வி வலயத்தின் முகாமைத்துவத்துக்கான  பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு.கே.ஜெயவதனன் ஆகியோர் கலந்து சிறப்பிக்க இந் நூலின் அறிமுகவுரையினை ஓய்வு நிலைக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.அ.சுகுமாரன் அவர்களும், சிறப்புரையினை ஓய்வு நிலைக் உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.டி.யுவராஜன் அவர்களும் நிகழ்த்தியிருந்தனர்.

இந் நூலுக்கான நிதியுதவியினை யாழ் இணுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட அமரர் தம்பு தாமோதரம்பிள்ளை அவர்களின் மூன்றாவது ஆண்டு ஞாபகார்த்தமாக அன்னாரின் குடும்பம் சார்பாக திரு.தா.ஞானகரன் வழங்கியிருந்தார்.

தரம் 5 மாணவர்களுக்கான 'சுற்றாடல் சார்ந்த செயற்பாடு' எனும் நூலினை கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.தினகரன்- ரவி அவர்களின் மேற்பார்வையின் கீழ் கல்குடா கல்வி வலயத்தின் ஆரம்பக் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.கே.யோகராசா அவர்கள் ஒழுங்கிணைப்புச் செய்து ஆலோசனை வழங்கியதன் மூலம் கல்குடா கல்வி வலய வளவாளர் குழு இந் நூலினை தயாரித்திருந்தனர். இந் நூலானது ஆரம்பக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள், அத்துறைசார்ந்து பணியாற்றும் சகலருக்கும் துணைச்சாதனமாக அமையக் கூடியதாகவுள்ளது.