மீண்டும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு!


வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை மீண்டும் அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரச் சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இந்த மாதத்தின் முதல் இரு வாரங்களில் 17,000 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானியா உட்பட ஐரோப்பிய நாடுகளிலும் இந்தியா – கனடா ஆகிய நாடுகளிலிருந்தும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.

கடந்த மே மாதத்தில் மாத்திரம் நாளாந்தம் 650 சுற்றுலா பயணிகளின் வருகை பதிவானதுடன், தற்போது அந்த எண்ணிக்கை 1,600 வரை உயர்ந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரச் சபை குறிப்பிட்டுள்ளது.