களுவாஞ்சிகுடி மத்தியஸ்த சபையில் கடந்த பன்னிரெண்டு வருடங்களாகக் கடமையாற்றிக் கொண்டிருக்கும் 8 மத்தியஸ்த்தர்களுக்கு நீதிச் சேவை ஆணைக்குழுவின் சிபார்சின் பேரில் நீதி அமைச்சினால் தீவு முழுவதற்குமான (அகில இலங்கை) சமாதான நீதவான்களாகக் கடந்த 01.04.2022 இல் நியமனம் வழங்கப்பட்டு 23.08.2022 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி ஜனாப் எச்.எம். மொஹமட் பஸீல் அவர்களின் முன்னால் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
உதவித் தவிசாளர் திரு.வேல்முருகு – மகேஸ்வரன், மத்தியஸ்த்தர்களான திரு.இராசமாணிக்கம் - கிறேசன் தயாளன், திரு.கந்தையா – உதயகுமார், திரு. கோவிந்தபிள்ளை கைலாயபிள்ளை, திரு.மாரக்கண்டு – சதாநேசன், திரு.காசுபதி – சச்சிதானந்தம், திரு.சாமித்தம்பி – ஏகாம்பரம், மற்றும் திரு.சின்னத்தம்பி – கனகசூரியம் ஆகியோர் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டவர்களாகும்.













