
(சித்தா)
பட்டிருப்பு கல்வி வலய தமிழ்பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.ந.நேசகஜேந்திரன் அவர்களின் ஒழுங்கமைப்பில் 2022 ஆண்டுக்கான அகில இலங்கைத் தமிழ்மொழித்தினப் போட்டிகள் இன்று (20.08.2022) மட்/பட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை, களுவாஞ்சிடியில் இடம்பெற்றது.
இப் போட்டி நிகழ்வுகளின் ஆரம்ப வைபம் மிகவும் விமரிசையாக கீழைத்தேய இசை வாத்தியங்களுடனும், கிராமிய நடன நிகழ்வுடனும் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரமத விருந்தினராக கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி.நகுலேஸ்வரி – புள்ளநாயகம் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
ஆரம்ப நிகழ்வானது பட்டிருப்பு தேசிய பாடசாலை கலைக்கூடத்தில் மங்கள விளக்கேற்றப்பட்டு இந்து, கிறிஸ்தவ ஆராதனையுடன் பட்டிருப்பு தேசிய பாடசாலை மாணவர்களினால் தமிழ் மொழி வாழ்த்து மற்றும் தமிழ் தின வாழ்த்தும் பாடப்பட்டு உணர்வு பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மட்/பட்/களுமுந்தன் வெளி கஜமுகன் வித்தியாலய மாணவிகளின் வரவேற்பு நடனமும் இடம் பெற்றது.
இந் நிகழ்வின் வரவேற்புரையினை பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு. எஸ்.மகேந்திரகுமார் அவர்களினால் நிகழ்த்தப்பட்டது. சிறப்பு உரையினை கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி.நகுலேஸ்வரி – புள்ளநாயகம் அவர்கள் நிகழ்த்தியிருந்தார்.
நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், நடுவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
ஆரம்ப நிகழ்வினைத் தொடர்ந்து போட்டி நிகழ்வுகள் ஆரம்பமாகின. அகில இலங்கைத் தமிழ் மொழித் தின நிகழ்வுகள் கடந்த 3 வருடங்களாக கொவிட் 19 தொற்றுக் காரணமாக நடைபெறாமல் இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.



.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)

.jpeg)


.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)












