எரிபொருள் கிடைப்பது தொடர்பான மென்பொருள் அறிமுகம் – ICTA




நாட்டில் எரிபொருள் கிடைப்பது தொடர்பாக மக்களுக்குத் தெரிவிக்க புதிய மென்பொருளை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் (ICTA) அறிமுகப்படுத்தவுள்ளது.

புதிய மென்பொருளின் ஊடாக நாட்டின் எந்தப் பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் கிடைக்கிறது தொடர்பில் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அதன் தலைவர் ஜயந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி, QR குறியீட்டு முறையின் கீழ், பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்தும் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்புள்ளதாக ICTA தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பொதுமக்கள் உல்லாசப் பயணங்களுக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் போது பிராந்திய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்ளும் முறைமையொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.