மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பன்குடாவெளி றோ.க.த.க பாடசாலையின் ஆசிரியர் தின நிகழ்வுகள் பாடசாலையின் அதிபர் , பாசாலையின் அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்களின் ஏற்பாட்டிலும் மாணவர்களின் ஒழுங்கமைப்பிலும் அதிபர் ஆர்.செந்தில்நாதன் தலைமையில் பாடசாலை வளாகத்தில் இன்று வியாழன்(06)இடம்பெற்றது.
ஆரம்ப நிகழ்வாக மாணவர் மற்றும் பெற்றோர்களினால் அதிதிகளையும் ,ஆசிரியர்களையும் வரவேற்கும் நிகழ்வு இடம்பெற்றது .
அதனை தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் ஆசிரியர் கீதம் இசைக்கப்பட்டு ஆசிரியர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் கலை நிகழ்வுகளும் , ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு மற்றும் பரிசில்கள் வழங்கள் நிகழ்வுகளும் இடம்பெற்றது .
சமூகத்திற்கும் நாட்டுக்கும் நற்பிரஜைகளை உருவாக்குவதில் வழிகாட்டியாக இருக்கின்ற ஆசிரியர்களை கௌரவிக்கும் வகையில் பாடசாலையின் மாணவர்கள் மற்றும் பெற்றோர் பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபையின் தவிசாளர் சி.சர்வானந்தன், பன்குடாவெளி றோ.க.த.க பாடசாலையின் ஆசிரியர்கள், மட்டக்களப்பு மண்முனை மேற்கு கல்வி வலையத்தின் பிரதிக்கல்விப்பணிப்பாளர் ஏ.ஜெயக்குமணன், EPST இணைப்பாளர் எஸ்.பரமானந்தம் பாடசலையின் அதிபர் ஆர்.செந்தில்நாதன் , ஆசிரியர்கள் ,மாணவர்கள் மற்றும் பாடசாலையின் அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் , பழைய மாணவர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.


.jpeg)

.jpeg)
.jpeg)
.jpeg)



.jpeg)


.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)



.jpeg)
.jpeg)
.jpeg)

.jpeg)


.jpeg)










