தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி அவர்களின் தலைமையிலும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் மா.செல்வராஜா மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம் ஆகியோரின் முன்னிலையிலும் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்க வருமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தினர்.
கொக்கட்டிச்சோலை "குறவஞ்சி" நூல் வெளியீடு.
மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத்தின் அனுசரணையில் கவிக்கோ வெல்லவூர்க் கோபால் எழுதிய கொக்கட்டிச்சோலை குறவஞ்சி நூல் வெளியீடு மட்டக்களப்பு பிள்ளையாரடி தமிழ்ச்சங்க மண்டபத்தில் 08.10.2022 அன்று சனிக்கிழமை மு.ப 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது.















