மட்டக்களப்பு காணி பணிப்பாளர் ( LRC) தன்னை தாக்கியதாக பிரதேச சபை உறுப்பினர் பொலிஸில் முறைப்பாடு

 

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பணிப்பாளர்   தன்னை தாக்கியது  தொடர்பில் காத்தான்குடி பொலிஸில்  முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் ஆரையம்பதி பிரதேச சபையின் உறுப்பினர் மாணிக்கம் கந்தசாமி தெரிவித்தார்.  

சம்பவம் தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில் 

மட்டக்களப்பு அரச காணிகள் விற்கப்பட்டுள்ளன   என பாராளமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பாராளமன்ற உரையில் தெரிவித்திருந்தார் , இது தொடர்பில் பாராளமன்ற உறுப்பினருக்கு  நான் தான் தகவல் வழங்கி இருக்கிறேன் என கூறி  வீதியில் நின்ற என்னை காணி பணிப்பாளர் விமல்ராஜ் தாக்கி தள்ளி விட்டதுடன்  குழுவினருடன் வந்து அச்சுறுத்தியிமிருந்தார் .

இதனையடுத்து நான் காத்தான்குடி பொலிஸில்  முறைப்பாடு செய்துள்ளேன் என மாணிக்கம் கந்தசாமி பிரதேச சபை உறுப்பினர் தெரிவித்தார். 

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை  காத்தான்குடி பொலிஸார்   மேற்கொண்டு வருகின்றனர் .