செங்கலடி Mother Kids Garden பாலர் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி!

(செங்கலடி நிருபர் சுபா)

மட்டக்களப்பு - செங்கலடி Mother Kids Garden பாலர் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியானது ஐயங்கேணி பொது விளையாட்டு மைதானத்தில் இம் முறையும் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

Mother Kids Garden பாலர் பாடசாலையின் அதிபர் திருமதி.உமாரமணி சபேஸ்குமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதிகளாக கிழக்குப்பல்கலைக்கழக  சிரேஸ்ட விரிவுரையாளர் ஜீ.பாரத்;தீபன், கல்குடா கல்விவலைய பிரதிப்பணிப்பாளர் கே.ஜீவகரன், ரீ.ரமேஸ் - கல்குடா கல்விவலையம் , பாலர் பாடசாலை ஒருங்கிணைப்பாளர் சரோஜினிதேசி மிச்சேல் மற்றும் என்.சிவராமனன், கே.ரிசாந்தன் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
 
அதிதிகள் மாணவர்களினால் பூமாலை அணிவிக்கப்பட்டு வரவேட்கப்பட்டதுடன் தேசிய கீதம் இசைக்கப்பட்டு கொடிகள் ஏற்றப்பட்டதுடன், மங்கள விளக்கேற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

 இம் முறையும் மாணவர்களுக்காக விளையாட்டுக்;களான பலூன் உடைத்தல், மிட்டாய் விளையாட்டு, ஓட்டப்போட்டி கதிரைப்பாய்ச்சல் எனப் பல விளையாடடுக்கள் இடம்பெற்றதுடன் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன.
 
இதேவேளை பெற்றோர்களுக்கான விளையாட்டுக்களும் இடம்பெற்றிருந்ததுடன்
குறிப்பாக இம்முறையும் மாணவர்கள் வினோதஉடைப்போட்டியிலும் கலந்துகொண்டிருந்தனர்.