5,000ஆவது மஹாஜன சம்பதா லொத்தர் சீட்டெழுப்பின் முதல் லொத்தர் சீட்டு ஜனாதிபதியிடம் கையளிப்பு !மஹாஜன சம்பதாவின் 5,000 ஆவது லொத்தர் சீட்டெழுப்பின் முதல் லொத்தர் சீட்டு விற்பனை இன்று முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

‘மகாஜன சம்பதா’ லொத்தர் சீட்டின் குலுக்கல் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.

தேசிய லொத்தர் சபையின் பதில் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் சி பெரேரா ஜனாதிபதியிடம் சீட்டை கையளித்தார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் ஜனாதிபதியின் பணிமனையின் பிரதானி சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் பாராளுமன்ற விவகாரங்களுக்கான ஆலோசகர் பேராசிரியர் அஷு மாரசிங்க, தேசிய லொத்தர் சபையின் பொது முகாமையாளர் சட்டத்தரணி ஹஷினி ஜயசேகர, சபை உறுப்பினர்களான டி.டி. ஜயசிறி, சட்டத்தரணி அசங்க ரந்தெனிய, உதவிப் பொது முகாமையாளர் (விற்பனை) மெனுர சதுரங்க, உதவிப் பொது முகாமையாளர் (கொள்முதல்) சுனேத் ஜயவர்தன மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.