(தனு )
உலகமெங்கும். வாழும் மக்கள். பிறந்துள்ள புத்தாண்டை. வெகு விமர்சையாக. கொண்டாடி வருகின்றனர். புத்தாண்டுக்கான. நள்ளிரவு ஆராதனைகள். நாடெங்கும் தேவாலயங்களில் சிறப்பாக நடை பெற்றன. மட்டக்களப்பு மாவட்டத்தின் புத்தாண்டுக்கான. நள்ளிரவு ஆராதனை பிரதான வழிபாடு மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியால் பேராலயத்தில் நடைபெற்றது.ஈஸ்டர் தாக்குதல்,கொவிட் நிலைமைகள் காரணமாக மட்டுப்படுத்தப்பட்டிருந்த புத்தாண்டுக்கான. நள்ளிரவு ஆராதனைள் வழிபாடுகள் இம்முறை சிறப்பாக நடைபெற்றது.
மட்டக்களப்பு அம்பாறை மறை மாவட்ட ஆயர் பொன்னை யோசப் தலைமையில் ஆலய பங்குத்தந்தை ஜோர்ஜ் ஜீவராஜ் உட்பட பங்கத்தந்தைகளினால் இந்த வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது புத்தாண்டுக்கான. நள்ளிரவு ஆராதனையில் நாட்டு மக்களும் அரசாங்கமும் நல்லாசி வேண்டி. திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது. மேலும் புத்தாண்டை குறிக்கும் பாடல்கள் இசைக்கப்பட்டதோடு. புத்தாண்டு நல்லாசி உரைகளும். இங்கு இடம் பெற்றன. இப் புத்தாண்டு நள்ளிரவு ஆராதனைகள். பெருமளவான. கிறிஸ்தவ போது மக்கள் கலந்து கொண்டனர்.












