கல்முனையில் இருந்து திருகோணமலை சென்ற பஸ் விபத்து !

(வி.ரி. சகாதேவராஜா)

கல்முனையில் இருந்து திருகோணமலை நோக்கி சென்று கொண்டிருந்த இ.போ.ச. பஸ் மட்டக்களப்பு நகரில் வைத்து லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இச் சம்பவம் இன்று (25) சனிக்கிழமை பிற்பகல் 2.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.பஸ் முகப்பு சேதத்துக்குள்ளானது. லாரியும் மின் கம்பத்துடன் மோதி சேதத்துக்கு உள்ளானது.

விபத்துக்குள்ளான  பயணிகள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள் .  மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.