ஆரையம்பதி உயர் தேசிய தொழில்நுட்ப நிறுவகத்தன் மாணவர்களுக்கிடையேயான கிரிக்கெட் சுற்றுப் போட்டி - 2023

மட்டக்களப்பு ஆரையம்பதி  கோவில்குளம் உயர் தேசிய தொழில்நுட்ப நிறுவகத்தினால் மாணவர்களுக்கு இடையில் தலைமைத்துவம் பண்பினை வழக்கும் முகமாக வருடாந்தம் நடைபெறும் கிரிக்கெட் சுற்றுப் போட்டி - 2023  மட்டக்களப்பு தாழங்குடா தேசிய கல்விக் கல்லூரியின் மைதானத்தில்  2023.05.11  கடந்த வியாழக்கிழமை அன்று  உயர் தேசிய தொழில் நுட்ப நிறுவகத்தின் பணிப்பாளரும் முதல்வருமான எஸ்.ஜெயபாலன் தலைமையில் நடைபெற்றது.

இந்த போட்டி நிகழ்வில் உயர் தேசிய தொழில்நுட்ப நிறுவகத்தில் கல்வி பயிலும் உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா(HNDA), ஆங்கில டிப்ளோமா (HNDE), தகவல் தொழில்நுட்பம் டிப்ளோமா (HNDIT) , சுற்றுலா மற்றும் நலனோம்பு முகாமைத்துவம் டிப்ளோமா(HNDTHM) பாடநெறியின் முதலாம், இரண்டாம் வருடம் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில்  06 சுற்றுக்கள் இடம்பெற்று  இதன்  இறுதிப் போட்டி முதலாம் வருட உயர் தேசிய டிப்ளோமா தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயர் தேசிய டிப்ளோமா ஆங்கிலம் ஆகிய குழுக்களுக்கு இடையே  நடைபெற்றது. இதில்  தகவல் தொழில்நுட்ப டிப்ளோமா முதலாம் வருட மாணவர்கள் வெற்றி பெற்று  கேடயத்தினை தட்டிச் சென்றனர்.

மேலும் இந்நிகழ்வில் அதிதியாக மட்டக்களப்பு தாழங்குடா தேசிய கல்விக் கல்லூரியின் பீடாதிபதி வெற்றிபெற்ற மாணவர்களுக்கான வெற்றி கேடயங்களை வழங்கி வைத்தார்.  இப்போட்டி நிகழ்வில் நடுவர்களாக கோவில்குளம் பவர் பாய்ஸ் கழகத்தினர் கலந்து கொண்டனர்.