சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் விழிப்புணர்வு பேரணி


சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு பேரணி இன்று புதன்கிழமை காலை  இடம்பெற்றது 

இவ் பேரணியானது   தம்பிலுவில் மத்திய சந்தையில்  இருந்து ஆரம்பமாகி திருக்கோவில் ஆதார வைத்தியசாலை வரை சென்றடைந்தது . 

திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி பரநிருபசிங்கம் மோகனகாந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்த விழிப்புணர்வு  பேரணியில்  பொது சுகாதார பரிசோதகர்கள் ,  குடும்ப நல  உத்தியோகத்தர்கள் , அலுவலக ஊழியர்கள் ஆசிரியர்கள்,  மாணவர்கள் , பொதுமக்கள் உட்பட  பலர்  கலந்து கொண்டிருந்தனர்

இந்த பேரணியில் புகைத்தலால்  ஏற்படும் விளைவுகள் தொடர்பான விழிப்புணர்வு  பதாதைகளை ஏந்தியவாறு பேரணியில் கலந்துகொண்டவர்கள் சென்றனர் .