
கேகாலை பொது வைத்தியசாலையின் தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவருக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகளை செலுத்தியதன் பின்னர் ஒவ்வாமை ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
கேகாலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் மிஹிரி பிரியங்கனி இது தொடர்பில் தெரிவிக்கையில், நோயாளியின் உடம்புக்குள் செலுத்தப்பட்டிருந்த நுண்ணுயிர் எதிர்ப்பிகள்தான் அவரது மரணத்துக்கு காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கைகள் வெளிப்படுத்தியதாக கூறியுள்ளார்.
நோயாளிக்கு முன்பு 13 முறை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் செலுத்தப்பட்டன. மேலும், 14 ஆவது முறையாக அவருக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் செலுத்தப்பட்டபோதே அவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு, பின்னர் மரணத்தை தழுவினார்.
57 வயதான கேகாலை பிரதேசத்தைச் சேர்ந்த இவரின் மரணம் தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கேகாலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.