2135 பேருந்துகள் சேவையிலிருந்து நீக்கம்; சாரதிகள் பேருந்துகளுக்கு தட்டுப்பாடு !


இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 7298 பஸ்களில் 2135 பஸ்கள் சேவையில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

மேலும், நாடு முழுவதிலும் உள்ள நகரங்கள், புறநகர்ப் பகுதிகள், கிராமப்புற வீதிகள் மற்றும் பயணிகள் போக்குவரத்து சேவைகளை உள்ளடக்குவதற்கு 7339 பேருந்துகள் தேவைப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை குறிப்பிட்டுள்ளது.

சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் இல்லாத காரணத்தினால் பயணிகள் போக்குவரத்து சேவையை உரிய முறையில் பேண முடியாதுள்ளதாகவும் போக்குவரத்து சபையின் எதிர்கால திட்டங்களுக்கு அமைய 1500 புதிய பஸ்கள் தேவைப்படுவதாகவும் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

123 சொகுசு பஸ்கள் தங்களிடம் இருப்பதாகவும், ஆனால் இன்னும் நூறு சொகுசு பஸ்கள் தேவைப்படுவதாகவும் லங்கம குறிப்பிட்டுள்ளது.

325 பேருந்துகள் குத்தகை அல்லது கடன் பத்திரத்தில் எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஐந்து கோடி ரூபாய் எழுபத்து லட்சத்து ஐம்பத்தேழாயிரம் (57,157,000) மாதாந்தம் தவணை முறையில் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.