
(சித்தா)
நீலவானத்திற்கான சுத்தமான காற்றுக்கான சர்வதேச தினம் மற்றும் உலக ஓசோன் தினங்களைக் பாடசாலைகளில் நடைமுறைப்படுத்துமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அறிவித்தலுக்கமைவாக கல்முனை வலயத்தில் கடந்த 7 ஆம் திகதி தொடக்கம் 16 வரையான ஒரு வாரகாலத்தில் இந் நிகழ்வு இரண்டும் கொண்டாடப்பட்டு வருகின்றன.
மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற செப்டம்பர்; 7, நீலவானத்திற்கான சுத்தமான காற்றுக்கான சர்வதேச தினம் மற்றும் செப்டம்பர் 16, உலக ஓசோன் தினம் போன்றவற்றின் நிகழ்ச்சிகளின் ஆரம்ப நிகழ்வு பாண்டிருப்பில் கொண்டாடப்பட்டது. கமு/கமு/பாண்டிருப்பு மத்திய மகாவித்தியாலயத்திலிருந்து சுற்றாடல் முன்னோடிக் கழக மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் சிரமதானங்களை மேற்கொண்டு இத்தினத்தினைக் கொண்டாடினர்.
பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலயம் மற்றும் வெளி வீதிகள் சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டதுடன் குப்பைகளற்றதும், பொலித்தீன், பிளாஸ்ரிக் பொருட்களின் பாவனையைக் கட்டுப்படுத்தல் மூலம் தூயகாற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் துண்டுப்பிரசுரமும் பாண்டிருப்பு மக்களுக்கும், வீதியால் பயணிப்பவர்களுக்கும் வழங்கப்பட்டது. இந் நிகழ்வு கல்முனைப் பிரதேச சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதிப் பதக்கம்; பெறவுள்ள மாணவர்களால் ஒழுங்கமைக்கப்பட்டது.
நிகழ்வில் பாண்டிருப்பு மத்திய மகாவித்தியாலய அதிபர், பிரதியதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், சுற்றாடல் முன்னோடிக் கோட்ட ஆணையாளர், பிரதேச செயலகத்தின் சமுர்த்தி உத்தியோகஸ்த்தர்கள், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதேசத்திற்குரிய சுற்றாடல் துறை அதிகாரி, மற்றும் கல்முனை வலய சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதிப் பதக்கம் பெறும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
.jpeg)



.jpeg)

.jpeg)






















