திரிபோசா திருடர்களுக்கு 14 நாட்கள் விளக்க மறியல்

 


சுகாதார அமைச்சின் தாய் சேய் நலன்புரி திட்டத்தின் கீழ்  மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு எடுத்து வரப்பட்ட  திரிபோசா பக்கட்டுகளை திருடி விற்பனை செய்த மூவரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு புகையிரத்தின் பொருட்கள்  பெட்டியின் ஊடாக எடுத்துவரப்பட்ட  திரிபோசா பக்கட்டுகளில் 750 கிராம் எடை கொண்ட 150 பக்கெட்டுகளை திருடிய நபர்களே இவ்வாறு மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

 மேலும் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது