பெரியகல்லாறு பாடசாலைகள் நான்கிலிருந்து 23 மாணவர்கள் ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி!


(ரவிப்ரியா)

பெரியகல்லாற்று மெதடிஸ்த மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் இருந்து 1 மாணவனும். விநாயகர் வித்தியாலயத்தில் இருந்து 8 மாணவர்களும், மெதடிஸ்த மிஷன் பெண்கள் பாடசாலையில் இருந்து 12 மாணவர்களும், மற்றும் உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில் இருந்து இரு மாணவர்களுமாக மொத்தம் 23 மாணவர்கள் வெளியாகியள்ள ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றுக்கமைய சித்தி பெற்றுள்ளனர்.

பெரியகல்லாறு விநாயகர் வித்தியாலயத்தில் இருந்து பரீட்சைக்கத் தோற்றிய 30 மாணவர்களில் 8 மாணவர்கள் வெட்டுப்பள்ளிக்குமேல் பெற்று சித்தி பெற்றுள்ளனர். சித்தியடைந்தோர் வீதம் 27ஆக காணப்படுகின்றது.

விபரம் பின்வருமாறு, று.றோஜித் (171), சி.சக்ஷனா (161), சு. ஷம்பிறிதி (158), த.லிதீஷன் (155), ச.ரிஷானிகா (154), யோ.கிருத்திகா (152), நே.பிறித்தி (152), அ.அவ்னிஷான் (149).

70 புள்ளிகளுக்குமேல் பெற்று சித்தி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 28ஆகும். இது 93.3 வீதமாக காணப்படுகின்றது

மேற்குறித்த பெறபேறுகள் பற்றி கருத்துத் தெரிவித்த பாடசாலையின் அதிபர் கே.கமலநாதன் கடந்த வருடத்தைவிட இவ்வருடம் பெறுபேற்றில் 145வீதம் அதிகரிப்பு காணப்படுவதாகவும,; இது நல்ல நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதுடன் அடுத்த பெறுபேறு மேலும் பிரகாசமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை என்றும் குறிப்பிட்டார்.

இந்த பெறுபேற்றை பாடசாலை பெற்றுக் கொள்வதற்கு ஏனைய ஆசிரியர்களுடன் இணைந்து பொறுப்பாசிரியை ஸ்ரீகரன் மிகவும் சிரமம் எடுத்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டார் என்பதை இங்கு சுட்டிக்காட்டுவதுடன், அன்னாருக்கும் சக ஆசிரியர்களுக்கும் பெற்றோரின் ஒத்துழைப்பிற்கம் எனது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்ளுகின்றேன் என்றும் குறிப்பிட்டார்.

;.